அமித்ஷாவின் தமிழக வருகையும்..அரசியல் கணக்குகளும்

Author
Praveen Rajendran- inPolitics
Report
3088Shares

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தற்போது தமிழகத்திற்கு வந்ததற்கான பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அமித்ஷாவின் வருகை தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.இந்த நிலையில் இன்று அமித்ஷா அவர்கள் சென்னை வருகை தந்தார்.அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் வரவேற்றனர்.

தற்போது அமித்ஷா அவர்களின் வருகை அடுத்த வருடம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலின் அரசியல் வருகையாக பார்க்கப்படுகிறது.தமிழகம் வரும் அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டபப்ட்ட நீர்த்தேக்கத்தை பொதுபயன்பாட்டிற்கு அர்பணிப்பார். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் அதிமுகவுடன் மீண்டும் நட்பை தொடர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலை இருகட்சியினரும் இணைந்து சந்திப்பார்களா சந்தேகமும் அமித்ஷா அவர்களை வருகையில் தெளிவாகிவிடும்.இந்த சந்தேகத்திற்கான காரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் நன்மை எதுவும் ஏற்படவில்லை. இந்த கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவுடன் சற்று பிணக்கத்துடன் இருக்கும் தமிழக ஆளும் கட்சி அ.இ.அ.தி.மு.க ஊடலை சீர் செய்து தேர்தலை சந்திக்குமா அல்லது விரிசல் பெரிதாகும் என்பது தான் தற்போது அரசியல் வட்டற்றத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நிலையில்.அதனை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து வேலைகளுக்கும் தற்போது அமைதியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.