ஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன தகுதி இருக்கிறது அமித்ஷா ஆவேசப்பேச்சு

Author
Praveen Rajendran- inPolitics
Report
2961Shares

ஊழலைப்பற்றி பேசுவதற்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் இன்று சென்னை வருகை தந்தார்.அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களும் வரவேற்றனர்.அதன் பிறகு அதிமுக அரசால் அமித்ஷா அவர்களுக்கு அமைக்கப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் உரையாடினார்.அப்போது அமித்ஷா அவர்கள் பேசியதாவது.

தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் வேளையில் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். மோடி, ஊழல், குடும்ப அரசியல், சாதிய அரசியலுக்கு எதிராக பிரச்சினைகளை கையிலெடுத்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். குடும்ப அரசியலுக்கு எதிராக ஒன்றை சொல்கிறேன்.

நண்பர்களே எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யமாக இருக்கிறது. காங்கிரஸ் - திமுககூட்டணியினர் ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஊழலுக்கு எதிராக பேச இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது. இந்த கூட்டணி 2ஜி போன்ற பல ஊழல்களுக்கு சொந்தக்காரர்கள்.

ஊழலைப் பற்றி பேசும் முன் திரும்பி உங்கள் குடும்பத்தை பாருங்கள். ஏழைகள் நலனில் மோடி அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. தமிழக மீனவர்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள். உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் பார்வையையே மோடி மாற்றியுள்ளார்.

இவ்வாறு காங்கிரஸ்-திமுக கூட்டணி மீதான தஹனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.