பாஜகவில் இணைந்தார் முக அழகிரியின் ஆதரவாளர்

Author
Praveen Rajendran- inPolitics
Report
37336Shares

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தலைமைக்கு எதிராக பேசியதாக கடந்த ஏப்ரல் மாதம் எம்பி கே.பி.ராமலிங்கம் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இந்த நிலையில் இன்று காலை கே.பி.ராமலிங்கம் இன்று காலை தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை அவர் சந்தித்தார்.

அப்போது, இன்று சென்னை வரும் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார். எனவே, கே.பி.ராமலிங்கம், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கே.பி.ராமலிங்கம் அவர்கள் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.