ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் 30 - ம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு பின்னணியில் மத்திய உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா உள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகளில் தகவல் கசியவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரும் 30ம் தேதி காலை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
அன்றைய தினம், தமிழக அரசியல் நிலவரம், ரசிகர்கள் மனநிலை, நிர்வாகிகளின் கருத்து என பல்வேறு திசைகள் குறித்து கருத்து கேட்க முடி செய்துள்ளார்.
இதனையடுத்து, அரசியலில் ரஜினிகாந்த் இறங்குவது பற்றி இறுதி முடிவு செய்ய உள்ளார். இதற்காக தொலைப்பேசி வாயிலாக அனைத்து நிர்வாகிகளுக்கும் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தான் அரசியலுக்கு வர உள்ளதாக ரசிகர்கள் முன்பு நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.
2021- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தங்கள் இலக்கு என்றும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். அவருடன் ரஜினிகாந்த் சந்திப்பார் என தகவல் வெளியானது. ஆனால், சந்திப்பு நடக்கவில்லை.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை ரஜினிகாந்த் எடுப்பார் என்றே தெரிகிறது. அவர் டிவி மறறும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை உறுதிபடுத்தும் வகையில், பாஜக தீவீர ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி அண்மையில் ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார்.
மேலும், ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என அவரது அண்ணன் சத்தியநாராயணன் மற்றும் காந்தியவாதி தமிழருவி மணியன் கூறி வருகின்றனர். இதனால் அரசியல் வட்டாரங்களில் தேர்தல் பற்றிய ஆலோசனைகள் தற்போது சூடுபிடித்துள்ளது.