ரஜினிக்கு ஃப்யர் விட்ட அழகிரி மகன்.! செல்போனில் வாழ்த்திய அழகிரி.! புதிய கூட்டணி தயாராகிறதா?

Author
Mohan Elango- inPolitics
Report

தமிழக அரசு நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்டு வந்த கேள்விக்கு இன்று விடை தெரிந்துவிட்டது. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்துவிட்டார்.

இன்று அதனை ட்விட்டரில் வெளியிட்டார். ஜனவரியில் கட்சி தொடங்குவது உறுதி. தேதி டிசம்பர் 31 அன்று அறிவிக்கப்படும் என்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் முழுவதிலும் ரஜினிகாந்த் அரசியல் வருகை பற்றிய செய்தியே ட்ரெண்ட் ஆகி வருகிறது.

பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்த் தனித்து தேர்தலைச் சந்திப்பாரா அல்லது பாஜக உடன் கூட்டணி வைப்பாரா என்பது தெரியவில்லை.

மறுபுறம் மு.க.அழகிரியும் கலைஞர் திமுக என்கிற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கி பாஜக உடன் கூட்டணி வைக்க உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில் ரஜினியின் அறிவிப்புக்கு அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார். ரஜினியின் ட்வீட்டை ஃபயர் போட்டு ரீட்வீட் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மு.க.அழகிரியும் ரஜினிகாந்துக்கு செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் ரஜினியுடன் கூட்டணிக்கு அழகிரி தயாராகி வருகிறாரா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளது.