மதுரையில் ராகுல் காந்தி- உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு?

Author
Fathima- inPolitics
Report

மதுரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உட்பட பல்வேறு கட்சிகள் தங்களுடைய பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தேசிய தலைவர்களின் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது.

குறிப்பாக பொங்கள் பண்டிகையை தங்களது கட்சியின் பிரசாரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

நாளை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட ராகுல் காந்தி வரவிருக்கிறார், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவும் தமிழகம் வருகிறார்.

இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாளை மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.