திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்: புதிய பாதையை தேர்ந்தெடுத்த திமுக

Author
Praveen Rajendran- inPolitics
Report

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் திடீர் விரிசலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டதை அடுத்து அரசியலை வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற திருவள்ளுவர் தின நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “தற்போது புதுச்சேரி திமுக மேலிடப் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் காலாப்பட்டில் செயல் வீரர்கள் கூட்டத்தை விரைவில் கூட்ட உள்ளோம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். கூட்டணியில் எந்தக் கட்சி வந்தாலும் திமுகதான் தலைமை தாங்கும்.

மேலும் திமுக கட்சியுடன் பல்வேறு காட்சிகள் கூட்டணி அமைக்க காத்திருக்கின்றனர். மேலும் புதுச்சேரியில் திமுக கட்சியின் ஆட்சி 100 சதவீதம் அமையும்" எனவும் தெரிவித்துள்ளார்.