பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்..எதற்காக தெரியுமா?

Author
Praveen Rajendran- inPolitics
Report

மும்பையில் பாஜகவினர் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

கொரோனாவை ஒழிக்கும் விதமாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‛கோவிஷீல்டு' ‛கோவாக்சின்' தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதிவழங்கியது. இதனை தொடர்ந்து, இரண்டு தடுப்பூசிகளும் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2வது கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட 27 கோடி முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில் காரோண தடுப்பூசிக்கு அனுமதி அளித்த பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மும்பையில் ஆரவாரத்துடன் பட்டாசு வெடித்தும் மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.