தேர்தல் பிரச்சாரத்தைப் பாதியில் நிறுத்திய முதல்வர்..எதற்காக தெரியுமா?

Author
Praveen Rajendran- inPolitics
Report

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரச்சாரத்தை பத்தியில் நிறுத்திய காரணம் அறிந்து மக்கள் நெகிழ்ந்துள்ளார்.

தமிழக்தில் சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி பல காட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இதில் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, நண்பகல் 12:45 மணி அளவில் காஞ்சிபுரத்தில் அவர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது ஒரு மணியளவில் அப்பகுதியில் உள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

இதனையறிந்த முதல்வர் பழனிசாமி, தமது பிரச்சாரத்தை ஐந்து நிமிடங்கள் வரை நிறுத்தி அமைதி காத்தார். மசூதியில் தொழுகை முடிந்த பிறகு அலர் தமது பிரச்சாரத்தை தொடங்கினார். முதல்வரின் இந்த செயல் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.