தளபதி விஜய் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் தனது பெயரிலே புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் பெயரில், கட்சிஆரம்பிக்க இருந்தார். இதற்காக, மூன்று பெயர்களை தேர்வு செய்து, மத்திய தேர்தல் ஆணையத்திற்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், தன் பெயரில் கட்சி ஆரம்பிக்க, விஜய் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சி ஆரம்பித்தால், தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் என கருதிய விஜய், இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம்அனுப்பினார். எஸ்.ஏ.சந்திரசேகர் பரிந்துரை செய்த, மூன்று பெயர்களில், விஜய் பெயர் இடம் பெற்றதால், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை. மாற்று பெயரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது.
இந்த நிலையில் புதிய கட்சியின் பெயராக 'அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி' வைத்து தொடங்கவுள்ளதாகவும்,தற்போது அதற்கான நிர்வாகி தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.