சசிகலாவுக்கு கொரோனாவுடன் கடும் நிமோனியா: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Author
Irumporai- inPolitics
Report

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, சிறையிலுள்ள சசிகலா, தனது தண்டனைக் காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக இருந்தநிலையில், சிறையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது.

இதனால் பெங்களூரு சிவாஜி சாலையில் உள்ள பவ்ரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சி.டி ஸ்கேன் இயந்திரம் இயங்காததால் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சசிகலா.

விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதையடுத்து அவரின் உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது.

அதில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு உடலின் சக்கரை அளவும் கூடியிருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்தார்.

இந்த நிலையில் சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.