வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் கருணாஸ் தெரிவித்தார்.
திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல என கூறினார்.
மேலும், வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைப்பதாக கூறினார்.
சசிகலா அவர்கள் 27ஆம் தேதி விடுதலை ஆகவுள்ளது, எங்கள் சமூகம் மட்டுமல்லாது, உண்மையான அதிமுகவினரும் வரவேற்பார்கள், என கூறினார்.
சசிகலா விடுதலையால் அதிமுக கட்சியில் சலசலப்பு ஆகுமா? என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.