சசிகலா வருவது புலி கதைப்போல ஆகிவிடும் போல - பாஜக மூத்த தலைவர் கருத்து

Author
Praveen Rajendran- inPolitics
Report

சசிகலா விடுதலை ஆவது புலி கதையைப்போல ஆகிவிடும் போல என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சசிகலா வரும் 27ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகிறார். அவருக்கு சிறையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தற்போது பெங்களூருவில் சிசிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் விடுதலையானதும் அதிமுக உடையும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சசிகலா சிறையில் இருந்து வருவதை சிங்கம், புலி வருவதை போல் சித்தரிக்கிறார்கள் என்றும், அப்படி எதுவும் நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சசிகலா அவர்கள் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழி என்பதால் அவர் அதிமுகவுக்கு துரோகம் செய்யமாட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.