இது நல்ல நண்பனுக்கு அடையாளம் கிடையாது- நடிகர் கமல்

Author
Nalini- inPolitics
Report

உடல்நிலை சரியில்லை என்று ரஜினி கூறிய பிறகு அவரை அரசியலுக்கு அழைப்பது நல்ல நண்பனுக்கு அடையாளம் கிடையாது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடித்து வருகிறது.

இதனால் எதிர்பார்ப்பும், பரபரப்பும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை போயஸ் கார்டனில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

இவர்களது சந்திப்பின் போது, தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால், கமல்ஹாசன் இதுகுறித்து பேசுகையில், ரஜினிகாந்தை சந்தித்த போது அரசியல் பற்றி பேசவில்லை என்றும், உடல்நிலை சரியில்லை என கூறிய பிறகு அவரை அரசியலுக்கு அழைப்பது நல்ல நண்பனுக்கு அடையாளம் கிடையாது என்றார்.