7 வது வீரராக களமிறங்கியது ஏன்?-விளக்கமளித்த தோனி

Author
Praveen Rajendran- inSports
Report
0Shares

14 நாட்கள் தனிமைப்படுத்துதல், நீண்ட நாட்கள் பேட்டிங் செய்யாமல் இருந்ததன் காரணமாக 7-வது வரிசையில் களம் இறங்கியதாக எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.

ஐபில் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில்சஞ்சு சாம்சன்,சுமித் ஆகியோரது அதிரடியில் 217 ரன்கள் குவித்தது.

அதன்பின் களமிறங்கிய சென்னை அணியில் டுபெலிசிஸ் 37 பந்தில் 72 ரன்னும் (1 பவுண்டரி 7 சிக்சர்), வாட்சன் 21 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் டோனி 17 பந்தில் 29 ரன்னும் (3 சிக்சர்) எடுத்தனர்.

இறுதியில் 20 வர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்து 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வி குறித்து பேசிய தோனி கூறியதாவது,

217 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடும் போது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மேலும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது.

ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்திருக்க வேண்டும், ஆனால் அதை செய்ய தவறி விட்டோம்.

எங்கள் பந்து வீச்சாளர்கள் நிறைய தவறுகளை செய்துவிட்டனர், குறிப்பாக அதிகப்படியான நோபால் வீசினர் இது பெரும் பின்னடைவாக இருந்தது.

நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. அதோடு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உதவவில்லை.

இதன் காரணமாகவே நான் 7-வது வரிசையில் களம் இறங்கினேன். சாம் கர்ரனுக்கு வாய்ப்புகளை வழங்க வெவ்வேறு விசயங்களை முயற்சிக்க விரும்பினோம் என தெரிவித்துள்ளார்.