சத்தமே இல்லாமல் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை

Author
Rooban- inSports
Report
681Shares

ஆபுதாபியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்யு பணித்தார்.

மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களுடன் 6 சிக்ஸர் 2 பவுண்டரி விளாசினார்.

இதையடுத்து, 196 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியினர், மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்து 146 ரன்களுக்கு 9 விக்கெட்டுடன் தோல்வியை சந்தித்தது. இதனால் மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.