பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவிக்கும் போதைப் பழக்கம்? நடிகை வெளியிட்ட பகீர் தகவல்

Author
Fathima- inSports
Report
0Shares

பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளும் போதைப்பொருளை பயன்படுத்தியதை கண்களால் கண்டதாக பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா தெரித்துள்ளார்.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கு சூடுபிடித்துள்ளது, சிபிஐ விசாரணையில் அவருக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் விசாரணையில் நாளுக்குநாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன, அந்தவகையில் பிரபல நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ராகுல் ப்ரீத் சிங், பேஷன் டிசைனர் சிமோன் கம்பாட்டா உள்பட பலரிடம் விசாரணை நடத்த இருக்கிறது.

விசாரணை வளையத்திற்குள் ஷெர்லின் சோப்ராவும் உள்ளார். இவர் ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்களால் கண்டதாக கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கொல்கத்தாவில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியை காணச் சென்றேன்.

அதன்பின் நடந்த பார்ட்டியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன், அங்கு வாஷ்ரூம் சென்ற போது, நட்சத்திரங்களின் மனைவிகள் போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

நான் தவறான பாதைக்கு வந்துவிட்டதாக நினைத்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன், ஆண்களுக்கான பகுதியில் சென்றிருந்தால், அங்கேயும் இது நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.