சீண்டும் ஹர்பஜன்: கொதிக்கும் CSK ரசிகர்கள்: நடந்தது என்ன?

Author
Gokulan- inSports
Report
0Shares

ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள ஒரு டிவீட்டால் சிஎஸ்கே ரசிகர்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டியின் போது 19-வது ஓவரில் சிஎஸ்கே பந்துவீசிய போது அம்பயர் ஒய்ட் பால் என்று கையை தூக்க நினைத்த போது, குறுக்கிட்ட தோனியை பார்த்ததும் உடனே ஒயட் இல்லை என்பது போல மாற்றிவிட்டார். இந்த விஷயம் சர்ச்சையானது. அம்பயரை தோனி மிரட்டினார் என்பது போல பேசப்பட்டது.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஹர்பஜன் டிவிட்டரில் வீடியோவை பகிர்ந்து சிரிக்கும் ஈ-மோஜிக்களை கேப்சனாக போட்டார். உடனே சிஎஸ்கே ரசிகர்கள் கோபமடைந்து ஹர்பஜனை திட்டி தீர்த்து விட்டனர்.

இதற்கு பதில் கூறும் விதமாக ஹர்பஜன் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில்,முன்பே நான் பன்றிகளுடன் சண்டை போடக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். நீங்கள் அழுக்காவீர்கள் மற்றும் பன்றிகள் அதை தான் விரும்பும். என டிவிட் செய்துள்ளார்.

இந்த டிவீட்டை கண்ட சிஎஸ்கே ரசிகர்கள் மீண்டும் ஹர்பஜன் மீது கோபம் கொண்டு அவரது பதிவின் கீழ் மீண்டும், கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் படங்களில் நடித்து விட்டு சிஎஸ்கே ரசிகர்களை அவமானப்படுத்துகிறீர்களா என்று கடுமையாகவும் நகைச்சுவையாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.