ஐ.பி.எல் அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்

Author
Gokulan- inSports
Report
0Shares
ஐபிஎல் கிரிக்கெடின் 32-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 148 ரன்கள் எடுத்தது. ஆட்டமிழந்தது.

பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் தொடக்க வீரர்களாக களம் இறங்க அணியின் ரன்ரேட் உயர்ந்தது.

10.3 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில்அவுட்டாக. மறுபக்கம் டி காக் 25 பந்தில் அரைசதம் கடந்தார்.

டி காக் உடன் சேர்ந்து ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.