பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளதா இங்கிலாந்து?

Author
Praveen Rajendran- inSports
Report
0Shares

கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடுத்த வருடம் ஜனவரி மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 தொடரில் விளையாடும்படி பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது.

இதன் மூலம் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச ஆட்டங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனைவருடனும் ஆலோசித்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு கடந்த 2005ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடதக்கது.