தெறிக்கவிட்ட ராயுடு மிரட்டிய ஜடேஜா

Author
Irumporai- inSports
Report
0Shares

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்த முறை தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டு பிளெஸ்ஸியுடன் சாம் கரணே களமிறங்க ரன் ஏதும் எடுக்காமல்ஆட்டமிழந்தார்.

பிறகு களம் இறங்கிய வாட்சன் மூலம் ரன் ரேட் எகிறியது.இந்த தொடரில் டு பிளெஸ்ஸி அரைசதத்தை எட்ட. அடுத்த பந்திலேயே வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு அதிரடி காட்டத் தொடங்கினார்.

தோனி 3 ரன்களில் ஆட்டமிழக்க ராயுடு தொடர்ந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களாலும் மிரட்ட களம்ம் கண்ட ஜடேஜாவும் மைதானத்தைவிட்டு வெளியே சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது 180 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி விளையாடி வருகிறது..