கடைசி ஓவரில் ஏன் ஜடேஜா? தோனி விளக்கம்

Author
Irumporai- inSports
Report
0Shares

ஐபிஎல்-ன் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின . இதில் தவானின் சதத்தால் டெல்லி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் 19-வது ஓவரில் பிராவோ உள்ள போது ரவீந்திர ஜடஜா பந்து வீசியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் கேள்வியையும் உண்டாக்கியது.

2 இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது ஏன் இந்த முடிவு? என்ற விமர்சனமும் கேள்வியும் எழுந்தது. இதற்கானகேள்வி ஆட்டம் முடிந்தவுடன் தோனியிடம் கேட்கபட்டது.

இதற்குப் பதிலளித்ததோனி பிராவோ முழு தகுதியுடன் இல்லை. களத்தைவிட்டு சென்ற அவரால் திரும்ப முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கடைசி ஓவரை ஜடேஜா வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. என்று தோனி விளக்கமளித்துள்ளார்..