துபாய் மைதானத்தில் வேற லெவலில் கெத்து காட்டிய தமிழக வீரர்கள்! மிரள வைக்கும் வீடியோ

Author
Nivetha- inSports
Report
2528Shares

ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், விக்கெட் கீப்பர் நிற்கும் தினேஷ் கார்த்திக் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி பந்து வீசும் போது, வருணுக்கு தமிழிலேயே அறிவுரைகளை வழங்குகிறார்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோனி மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெவாட்டியா ஆகியோரின் விக்கெட்டை வருண் சக்ரவர்த்தி அவுட் செய்ததற்கு பின்னால் தினேஷ் கார்த்திக்கின் டிப்ஸ்கள் முக்கிய பங்காற்றியது.

அவர்கள் மேலும் சில போட்டிகளில் தமிழில் உரையாடிக் கொள்வது தொடர்பான வீடியோ ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.