ரோகித் சர்மாவுக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் மத்தியில் குழப்பம்

Author
Mohan Elango- inSports
Report
9705Shares

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதில் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் சர்மாவின் காயம் காரணமாக தான் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா வலைப்பயிற்சி செய்யும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.

ரோகித் சர்மா உடற்தகுதியுடன் இருக்கையில் ஏன் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கவில்லை என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் உட்பட பலரும் கேள்வியெழுப்பி உள்ளனர்.

ரோகித் சர்மாவுக்கு என்ன ஆனது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதனால் ரோகித் சர்மாவுக்கு என்ன ஆனது என ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்த விவகாரத்தில் விரையில் உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.