தோனிக்காக ரசிகர் செய்த காரியம்.! இன்ப அதிர்ச்சியில் நன்றி தெரிவித்த தோனி

Author
Irumporai- inSports
Report
9321Shares

தமிழகத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ்-ன் ரசிகர்கள் பாசத்தை அளவிடமுடியாது. அந்த வகையில்கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன்.

துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வரும் தோனியின் தீவிர ரசிகரான இவர் தோனி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது வீட்டை மஞ்சள் நிற பெயிண்டினால் அலங்கரித்து, அதில் தோனியின் படத்தை வரைந்து அசத்தினார். அதோடு அவரது வீட்டிற்கு 'HOME OF DHONI FAN' எனவும் பெயரிட்டிருந்தார்.

அதனை வீடியோவாக எடுத்து வெளியிட அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அது தோனியின் பார்வைக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் தோனியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது பற்றி கூறும் தோனி, நான் அதை இன்ஸ்ட்டாகிராமில் பார்த்தேன், இது அன்பின் வெளிப்பாடு. அதே நேரத்தில் இது என்னை சார்ந்தது மட்டும் அல்ல. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய ரசிகர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

அவர்களது உள்ளுணர்வின் வெளிப்பாடு இது வேறும் போஸ்ட் அல்ல. காலத்தால் அழிக்க முடியாதது. அதேபோல் அவரது குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் தான் இதை அவர் செய்திருக்க முடியும். அதனால் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் எனது நன்றி" என தோனி தெரிவித்துள்ளார்.