2020 ஐ.பி.எல் தொடரை துபாயில் நடத்த பிசிசிஐ இவ்வளவு செலவு செய்ததா?

Author
Mohan Elango- inSports
Report
15444Shares

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இதற்காக பிசிசிஐ துபாய்,சார்ஜா அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களை வாடகைக்கு எடுத்திருந்தது. எட்டு அணிகளின் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் துபாயில் உள்ள மிகப்பெரிய சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் இது அனைத்திற்கும் பிசிசிஐ எத்தனை கோடி செலவு செய்திறுக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில், மூன்று மைதானங்களுக்கு வாடகையாக மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை கட்டணமாக பிசிசிஐ செலுத்தியுள்ளது’

இது தவிர 8 அணிகளும் தனித்தனியே விடுதிகளில் தங்குவதற்காக பல நூறு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் போட்டி நடைபெற்றாலும் 8 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் நடத்தும் அப்படி இருந்தும் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் ஒரு போட்டி நடத்தும் போது ஒரு கோடி ரூபாய் வரை இந்தியாவில் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படிப்பார்த்தால் மொத்தம் 60 போட்டிக்கு தற்போது 100 கோடி ரூபாயை பிசிசிஐ கட்டணமாக செலுத்தி இருக்கிறது. இது கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.