சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டுமென்றால்!... ஐசிசியின் புதிய விதிமுறை அறிமுகம்

Author
Fathima- inSports
Report
1799Shares

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு வயது வரம்பை நிர்ணயித்துள்ளது ஐசிசி.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆண்கள்/பெண்கள் ஐசிசி போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், யு-19 போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும்.

அதேவேளை எந்த வயதிலும் ஓர் வீரரை அறிமுகப்படுத்தலாம், ஆனாலும் ஐசிசியிடம் அனுமதி பெற வேண்டும்.

குறிப்பாக 15 வயதுக்கு உட்பட்ட வீரரை அணியில் சேர்க்க நினைத்தால், குறித்த வீரரின் அனுபவம், மனநிலை, தகுதி போன்றவற்றை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.