லங்கா கிரிக்கெட் லீக் நடைபெறுவதில் சிக்கல்?

Author
Fathima- inSports
Report
472Shares

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக்கில் இருந்து முன்னணி வீரர்கள் விலகி வருவதால் சிக்கல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை போன்று ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் ப்ரிமீயர் லீக், பாகிஸ்தானின் சூப்பர் லீக் என வர்த்தக ரீதியிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்கள் பல நடத்தப்படுகின்றன.

இதைப்போன்று இலங்கையிலும் லங்கா ப்ரீமியர் லீக் நடத்த திட்டமிடப்பட்டது, இலங்கையின் ஐந்து முக்கிய நகரங்களை மையமாக கொண்டு COLOMBO KINGS, தம்புல்லா ஹாவ்க்ஸ், காலே கிளேடியேட்டர்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ், கண்டி டஸ்கர்ஸ் என ஐந்து அணிகள் உருவாக்கப்பட்டன.

75 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 438 வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிலிருந்து தங்கள் அணிக்கான வீரர்களை நிர்வாகிகள் தேர்வு செய்தனர்.

இந்நிலையில் கிறிஸ் கெய்ல், லசித் மலிங்கா, ரவி போபரா, லியம் பிளங்கட், சர்ஃபராஸ் அஹமது போன்ற வீரர்கள் வெவ்வேறு காரணங்களால் எல்பிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மற்றொரு புறம் இந்தத் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த சோகைல் தன்வீர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ரவிந்தர் பால் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே முன்னணி வீரர்களின் வெளியேற்றம் மற்றும் கொரோனா அச்சத்தால் லங்கா ப்ரீமியர் லீக் நடப்பதில் சிக்கல்கள் அதிகரித்துள்ளன.