பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம் - இறுதிச் சடங்கிற்கு பங்கேற்காத சோகம்

Author
Nalini- inSports
Report
553Shares

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

முகமது சிராஜ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடினார். திறமையாக விளையாடியதால் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதனையடுத்து அவர் இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள சிராஜ் ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் உள்ளார்.

இந்நிலையில் அவரது தந்தை முகமது கோஷ் மரணமடைந்தார் என்ற செய்தி அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிராஜ் பேசுகையில், சிராஜின் தந்தை அவரை மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார். மேலும் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எப்போதும் சொல்வார் என்றார்.

ஆஸ்திரேலியாவில் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் சிராஜ் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் சிராஜ் மிகவும் கலக்கத்தில் உள்ளார்.