100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரர்

Author
Irumporai- inSports
Report
5477Shares

இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த ரகுநாத் சந்தோர்கர் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரகுநாத் சந்தோர்கர் தனது பிறந்தநாளில் ஒரு நூற்றாண்டு நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் 100 வயதை கடந்த மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையினை ரகுநாத் சந்தோர்கர் பெறுகின்றார்

சந்தோர்கர், 1943முதல் 1947 வரை மகாராஷ்டிரா மற்றும் பம்பாய் அணிகளுக்காகவிளையாடியுள்ளார்.சுழற்பந்து வீச்சாளரும் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.

ரகுநாத் சந்தோர்கர் தற்போது மும்பையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் வசித்து வருகிறார்.

இவரை பற்றி அவரது பேரன் ஷ்ரவன் ஹார்டிகர் கூறும் போது கிரிக்கெட் இன்னும் அவரது விருப்பமாக உள்ளது.

சில விஷயங்களை அவரால் நினைவில் வைத்துக் கொள்ளமுடியவில்லை, என்றாலும் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கிறார்'என்றார்.

இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்களில் பேராசிரியர் டி.பி. தியோதர் (1892-1993) மற்றும் வசந்த் ரைஜி (1920-2020) ஆகியோர் மட்டுமே 100 பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் என்பது குறிப்பிடதக்கது