ரோஹித் ஷர்மாவின் காயம் குழப்பமானதாக உள்ளது - கேப்டன் விராட் கோலி

Author
Praveen Rajendran- inSports
Report

எங்களுடன் ஒன்றாக விமானத்தில் பயணிப்பார் என எதிர்பார்த்தோம் ஆனால் அவர் அவர் எங்களுடன் சுற்றுப்பயணத்தில் பங்கேற்காதது புதிராக இருந்தது என இண்டை காப்பதன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,”அதிக குழப்பமானதாக ஆகிவிட்டது. மேலும் ரோகித் சர்மாவின் காயம் குறித்து நிச்சயமற்ற தன்மையும், தெளிவின்மையும் உள்ளது ” என்று தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் ரோஹித் சர்மா அவர்கள் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவரது காயம் காரணமாக கூறப்பட்டது.

அனால் அதன் பிறகு நடைபெற்ற ஐபில் தொடரில் அவர் பங்கேற்றார். எனவே, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திற்கு எங்களுடன் ஒன்றாக விமானத்தில் பயணிப்பார் என்று அனைவரும் நினைத்திருந்தோம். அவர் ஏன் எங்களுடன் பயணம் செய்யவில்லை என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. தெளிவின்மை தான் உள்ளது,”என்று கோலி தெரிவித்தார்.

நாளை காலை 9.10 மணியளவில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video