ஆஸ்திரேலியா அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தியது இந்தியா

Author
Praveen Rajendran- inSports
Report

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302- ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள், ஜடேஜா 66- ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 76- பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 303-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீர்களாக லபுஷேன் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 6வது ஓவரை வீசிய தமிழகத்தின் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். அவர் லபுஷேன் அவர்களை போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.

அத்தபிறகு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த சமயத்தில் மக்ஸ்வெல் அவர்கள் களம் புகுந்தார். அவர் காலத்திற்கு வந்ததும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். அவர் காலத்தில் நின்றவரை ஆஸ்திரேலியா அணி வெல்லவே அதிக வாய்ப்பு இருந்தது.

அந்த சமயத்தில் அவரது விக்கெட் பும்ரா அவர்கள் போல்டானார் அப்போது அவர் 58 ரன்கள் அடித்திருந்தார் . அதன் பிறகு கைநழுவி ஆட்டம் இந்தியா வசம் வந்தது.

இறுதியில் 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 289 ரன்கள் அடித்திருந்தது. இதன் மூலம் இந்தியா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டிய தேர்வானார்.

You May Like This Video