சிட்னி மைதானத்தில் தமிழில் பேசிய அஸ்வின்: வைரலாகும் வீடியோ காட்சிகள்

Author
Fathima- inSports
Report

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரி ஆகியோர் ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்தனர். அப்போது, விஹாரியுடன் அஸ்வின் தமிழில் பேசினார்.

கவலப்படாதா. பால் நேரா தான் வரும்.. பத்து பத்து பாலா பார்த்துக்கலாம் என விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.