ஆடு மாமா ஆளுக்கு 10 பால்தான் -ஆஸி காலி செய்த அஸ்வினின் தமிழ் பேச்சு!

Author
Irumporai- inSports
Report

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து தமிழில் பேசி திட்டங்களை வகுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. பரபரப்பான கட்டத்தில் செல்லும் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

ஐந்தாவது நாள் ஆட்டத்தில், அஸ்வின் - விஹாரியின் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் வெற்றிபெறும் கனவை கலைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் களத்தில் இருக்கும்போது சக வீரர் விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசினார்.

ஆந்திராவை சேர்ந்த விஹாரிக்கு தமிழ் தெரியும் என்பதால் அஸ்வின் அவரிடம் முழுக்க முழுக்க தமிழில் பேசினார். மாமா.. இப்படியே ஆடு மாமா என்று கூறினார். விஹாரி காயம் காரணமாக கொஞ்சம் கஷ்டப்பட்டார்.

அவருக்கு அஸ்வின் தமிழில் மாமா ஆளுக்கு பத்து பால் ஆடலாம். கொஞ்சம் ஓவர்தான் இருக்கு. பால் உள்ள வராது. கவலைப்படாம ஆடு என்று தமிழில் ஊக்கம் அளித்தார்.

இவ்வாறு அஸ்வின் தொடர்ந்து தமிழில் விஹாரியிடம் பேசி அவரை ஊக்கப்படுத்தி ஆட வைத்தார். அஸ்வினின் இந்த தமிழ் பேச்சும், நிதானமான திட்டமிடலும் உலக அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.