கட்டை விரலில் காயம்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அறுவை சிகிச்சை

Author
Mohan Elango- inSports
Report

இந்திய அணியில் ஆல்ரவுண்ட்ர் ஜடேஜாவுக்கு ஆஸ்திரேலிய அணி உடனான டெஸ்ட் தொடரின் போது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியானது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஜடேஜா ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.

”அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. சிறிது காலம் ஓய்வில் இருப்பேன். விரைவில் அணிக்கு திரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜடேஜா விரைவில் அணிக்கு திரும்ப பிசிசிஐ உட்பட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.