சச்சின், கோஹ்லிக்கு அடுத்தபடியாக நடராஜன்: நடிகர் சதீஷ் டுவிட்

Author
Fathima- inSports
Report

சர்வதேச கிரிக்கெட் உலகை கலக்கி வரும் நடராஜன் குறித்து பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார் நடிகர் சதீஷ்.

அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தமிழ் சினிமாவின் கல்லூரி விடுதி காட்சிகளில் சச்சின், கோஹ்லி, டோனி போன்ற வீரர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கும்.

ஆனால் தற்போது அந்த இடத்தை நடராஜன் அலங்கரிக்கிறார், உங்களது வளர்ச்சியால் பெருமிதம் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

இவர் நடித்துள்ள படத்தின் போஸ்டரை பகிர்ந்து கொண்டே சதீஷ் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியிலாவது நடராஜன் இடம்பெற வேண்டும் என்பதே பலரது விருப்பமாகும்.