கழிவறையை சுத்தம் செய்யும் இந்திய வீரர்கள்? பிரிஸ்பேனில் கடும் கட்டுப்பாடுகள்

Author
Fathima- inSports
Report

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் 15ம் தேதி தொடங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்திய அணியினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் கழிப்பறையை சுத்தம் செய்வது மற்றும் படுக்கையை தயார் செய்வது போன்ற வேலைகளையும் வீரர்களே செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால் இந்திய அணி பிரிஸ்பேன் சென்று விளையாட தயக்கம் காட்டிய நிலையில், போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாகவும், போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.