உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்- இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்

Author
Irumporai- inSports
Report

கடின உழைப்பு என்றுமே வீணாகாது ,உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு கடந்த வியாழக்கிழமை சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய நடராஜன், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியது சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்ததாக கூறினார்.

ஆஸ்திரேலியாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தாகவும்,வெற்றிக் கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கி விட்டேன் என கூறினர்.

இந்திய அணியில் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்தனர். ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார்.

பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை விட நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

மேலும், ஒற்றைச் சிந்தனையோடு கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி என கூறினார்.

இந்தியாவுக்காக மேலும் மேலும் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது என்று கூறினார்