கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Author
Irumporai- inSports
Report
சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரரும் பி.சி.சி.ஐயின் தலைவருமான சௌரவ் கங்குலி நெஞ்சு வலி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனை செய்து பார்த்ததில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் உடனே அவருக்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு பின்னர் டிஜாட்ஜ் ஆனார் கங்குலி.


பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி திடீர் நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.