5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஸ்ரீசாந்த்

Author
Fathima- inSports
Report

விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் உத்தரபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேரள அணிக்காக விளையாடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.

சூதாட்டத்தில் சிக்கி கடந்த 7 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீசாந்த் பங்கேற்கவில்லை, இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடினார்.

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட விண்ணப்பித்தும், எந்த அணியில் ஏலத்தில் எடுக்கவில்லை, எனவே விஜய் ஹசாரே தொடரில் கேரள அணிக்காக விளையாடி வருகிறார்.

இன்று உத்தரபிரதேசத்துக்கு எதிராக நடந்த போட்டியில் ஸ்ரீசாந்த் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்த ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் 65 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.