ஆன்லைனில் ஆள்பிடிக்கும் திமுக: டிரம்ப், எடப்பாடி பழனிசாமி உறுப்பினரான கூத்து

Author
Rengabashiyam- inTamilnadu
Report
0Shares

திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவரமறியா வாரிசு என்ற பெயர்களில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு உறுப்பினர்களை சேர்க்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி நடந்து வருகிறது. இதற்காக விளம்பரங்களை செய்து வருகிறது.

இந்நிலையில், திமுகவில் சேர்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில், அவர் சென்னை எழும்பூர் தொகுதியை சேர்ந்தவர் எனவும் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு அடையாள அட்டையில் 'விவரமறியா வாரிசு' என்ற பெயரிலும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அவரின் தந்தை பெயர் மலிவு அரசியல் மன்னர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், எந்த பெயரிலும், முகவரியிலும் விண்ணப்பித்தாலும் திமுகவில் உறுப்பினராகிவிடலாம் என கிண்டலடித்து வருகின்றனர்.