விஜயகாந்தின் தற்போதைய நிலை? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

Author
Mohan Elango- inTamilnadu
Report
681Shares

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் பல முக்கிய பிரபரலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜய்காந்த் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில், விஜய்காந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.