மருத்துவமனையில் விஜயகாந்த்: நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள்

Author
Fathima- inTamilnadu
Report
0Shares

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.