விஜயகாந்த் வீடு திரும்புவது எப்போது? மனைவி பிரேமலதா விஜயகாந்த் தகவல்

Author
Fathima- inTamilnadu
Report
711Shares

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளார் என தேமுதிய தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டது.

இதனையடுத்து, செப்டம்பர் 22 அன்று விஜயகாந்துக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலத்துடன் நலமுடன் இருக்கிறார் என அவரது மனைவி பிரேமலதா பேட்டியளித்துள்ளார.

சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.மேலும் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை என கூறினார்.

விஜயகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி, அரசின் அனைத்து விதிகளையும் மதிக்கும் கட்சி தேமுதிக என்பது எல்லோருக்கும் தெரியும் என பிரேமலதா கூறினார்.

தனிமைப்படுத்துதல் மற்றும் வீட்டில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்களது வீட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என பிரேமலதா விளக்கமளித்துள்ளார்.