திரையரங்குகள் திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Author
Fathima- inTamilnadu
Report
0Shares

திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய சுகாதார துறை அறிக்கை வெளியிட்டதும் திரையரங்குகள் திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளையில் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் 25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள நவீனமயமாக்கப்பட்ட கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கொரனா பரவலுக்கு பிறகு மாவட்டம் தோறும் சென்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய செல்லும் ஒரே முதல்வர் தமிழக முதல்வர் தான்.

கொரனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழக அரசு செயல்படுவதாக பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தெரிவித்தார்.

திரைப்பட துறையை பொறுத்த வரை படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள் திறப்பது மட்டும் தான் இறுதிகட்டமாக உள்ளது. நலவாரியம் மூலமாக நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு திரையரங்குகள் திறப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் அறிவித்துள்ளது தவிர வேற எந்த மாநிலத்திலும் திறக்கப்படவில்லை .

மத்திய சுகாதார துறை அறிக்கை வெளியிட்டதும் திரையரங்குகள் திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு திரையரங்குகள் திறப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் அறிவித்துள்ளது தவிர வேற எந்த மாநிலத்திலும் திறக்கப்படவில்லை .

மத்திய சுகாதார துறை அறிக்கை வெளியிட்டதும் திரையரங்குகள் திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் என தெரிவித்தார்.