பட்டு வேஷ்டி சட்டையுடன் கண்ணாடி பேழைக்குள் எஸ்பிபி: கலங்க வைக்கும் புகைப்படங்கள் வெளியானது

Author
Fathima- inTamilnadu
Report
767Shares

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இன்று நண்பகல் காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட நிலையிலும் கார்டியாக் அரெஸ்டால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக நாளை காலை வரை அவரது வீட்டில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்பிபியின் பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிகிறது.

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து எஸ்பிபி அவர்களின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்படும் காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் கண்களை குளமாக்கியுள்ளன.