தலை காட்டாமல் இருக்கும் தினகரன்: சசிகலா உத்தரவா?

Author
Gokulan- inTamilnadu
Report
0Shares

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீப காலமாக வெளியில் பார்க்க முடிவதில்லை, இதனை அவரது கட்சியை சேர்ந்தவர்களே முனுமுனுக்கின்றனர்.

அவர் யாருடனும் முன்பு போல் பேசுவதில்லை அவர் எங்கு இருக்கிறார் என கேள்வி எழுப்புகிறார்கள்.

கொரோனாவுக்கு முன்பு வரை ஆளும் கட்சி ஆட்சியின் குறைகளை கூறி வந்த தினகரன்.

தற்போது முக்கிய நிகழ்வுகளுக்கு அறிக்கையினை விட்டு அமைதியாகிவிடுகின்றார், அவர் தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக அக் கட்சியினர் கூறினாலும்.

அவர் பாண்டிச்சேரியில் உள்ள தனது வீட்டில் யாரிடமும் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார் எனவும், அதற்கு காரணம் சசிகலா யாரிடமும் பேச கூடாது என கூறியிருப்பதாகவும்,

தினகரனால் சசிகலாவின் நகர்வுகள் பாதிக்கக் கூடாது என தினகரன் அமைதியாக இருப்பதாக கூறுகின்றனர் மன்னார்குடி வட்டாராங்கள். உண்மையான விஷயம் என்ன என்பதை காலம் தான் கூறவேண்டும்...