இதற்கு விஜய்சேதுபதி ராஜபக்ச மகன் வேடத்தில் நடிக்கலாம்..!

Author
Fathima- inTamilnadu
Report
0Shares

பிரபல நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

கவிஞர் தாமரை, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் சேரன் உட்பட சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி நல்ல நடிகன், இந்த படத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என பலரும் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

இந்நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளரான சண் மாஸ்டர் அவர்கள் அளித்த பிரத்யேக பேட்டியில், விஜய் சேதுபதி சிறந்த நடிகர், முத்தையா முரளிதரனும் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் முத்தையா முரளிதரன் தமிழனாக வாழவில்லை, சிங்களராகவே வாழ்ந்தார், ஒரு சில சிங்களவர்கள் கூட தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்தது உண்டு.

முத்தையா முரளிதரனோ, இறுதி யுத்தம் முடிந்த நாளை வாழ்வின் மகிழ்ச்சியான நாள் என குறிப்பிட்டார்.

இதிலிருந்தே அவர் தமிழராக இருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம், தமிழன் என்றில்லை ஒரு மனிதராக கூட அவர் இந்த கருத்தை தெரிவித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்திலிருந்து நடிப்பதை தவிர்க்குமாறு ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.