‘நீட்’ தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு முன்னேற்றம்

Author
Nalini- inTamilnadu
Report
0Shares

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினார்கள். அப்போது தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 23-வது இடத்தில் தமிழ்நாடு இருந்தது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வை 99 ஆயிரத்து 610 பேர் எழுதியிருந்தனர். கடந்த ஆண்டை விட குறைவானவர்கள் தேர்வை எழுதியிருந்தாலும் தேர்ச்சி சதவீதம் அதிகமாகியுள்ளது. இந்த ஆண்டு 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் மூலம் கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்த முறை தேர்ச்சி பட்டியலில் 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.