நீட் தேர்வு எழுதியிருந்த மாணவன் தற்கொலை: அவசர அவசரமாக உடலை எரித்த பெற்றோர்கள்

Author
Fathima- inTamilnadu
Report
0Shares

நாமக்கல் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை அவசர அவசரமாக எரித்த பெற்றோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கார்கூடல்பட்டி செம்பாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன், இவருக்கு பழனியம்மாள், சிவகாமி என இரண்டு மனைவிகள்.

2வது மனைவியின் மகன் கதிர்வேல், அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவிட்டு நீட் தேர்வு எழுதியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்து கதிர்வேல் போனை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார், இதைக் கண்டித்த பெற்றோர், வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் கதிர்வேல், மருத்துவம் படிக்க ஆசைப்படுவதால் வேலைக்கு செல்லமுடியாது என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் எழுந்த நிலையில், சம்பவ தினத்தன்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் கதறித்துடித்த கதிர்வேலின் பெற்றோர், போலீசுக்கு தெரிவிக்காமல் கதிர்வேலின் உடலை தகனம் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்த வந்த போலீஸ் அதிகாரிகள் கதிர்வேலின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.